நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதில் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது - உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி அதிர்ச்சி தகவல்!

Saturday 20, April 2019, 20:54:41

நீதித்துறை மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது. என்னை விலை கொடுத்து வாங்கப் பார்த்தார்கள்; முடியவில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

"முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்படவுள்ள நிலையில் என்னை விலை கொடுத்து அவர்களால் வாங்க முடியவில்லை எனவே என் மீது பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்துள்ளார்கள். நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதில் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எனது இருக்கையில் இருந்து சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

வெறும் 6 லட்சம் ரூபாய் மட்டுமே பேங்க் பேலன்ஸ் வைத்துள்ள ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் பரிசா இது ? லஞ்ச புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள பெண்ணை வைத்து என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளனர்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்!

இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்ற ஆண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என புகார் அளித்தனர். அந்த புகார் அளித்தவர்களில் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் யும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது!

பிஎம் மோடி படத்தை வெளியிடுவதற்கு தடை , யோகி ஆதித்யனாத் பேச்சுக்கு தடை உள்ளிட்ட தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடதக்கது.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz