மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு 3 ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

Wednesday 01, May 2019, 18:47:14

வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ஃபானி புயல் தற்போது தீவிர புயலாக மாறி சென்னைக்கு வடகிழக்கே சுமார் 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது வரும் 2 தினங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து 3 ஆம் தேதி ஒரிசா மாநிலம் பூரி அருகில் கரையை கடக்கும்.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எனவே மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு 3 ஆம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைப் பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz