தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மே தினக் கொண்டாட்டம்

Wednesday 01, May 2019, 18:58:26

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்  இன்று (01.05.2019) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் கொடியினை ஏற்றி வைத்தார்.

500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் வழங்கிய அவர் தொழிலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மே தின வாழ்த்தைத் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் , ப.பார்த்தசாரதி,Ex:MLA, ஏ.எஸ்.அக்பர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் G.காளிராஜன் தொழிற்சங்க பேரவை பொருளாளர் எஸ்.முஜிபூர்ரகுமான், துணை தலைவர் டி.கே.விஜய்வெங்கடேஷ், துணை செயலாளர்கள் பி.வேணுராம், சா.மு.சக்திவேல், கே.வி.பாலாஜி, மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz