ஒகேனக்கல்: சுற்றுலா  வந்த  டூரிஸ்ட் வேன்  மற்றும் கார் ஆகியவை இரு வேறு இடங்களில் விபத்துக்கு ஆளானதில் 15 பேர் படுகாயம்

Wednesday 01, May 2019, 19:28:47

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்த  ஒகேனக்கல்லுக்கு  கோடை விடுமுறைக்காக திருப்பூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள்  ஒகேனக்கல்லை சுற்றி பார்த்து விட்டு  சொந்த ஊரான  திருப்பூர்க்கு மீண்டும் செல்லும் போது அவர்கள் வந்த வேன் விபத்துக்குள்ளானது.

பென்னாகரத்திலிருந்து மேச்சேரி செல்லும் வழியில்  கடமடை  என்னுமிடத்தில்  டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  வேன் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை  அருகே இருந்தவர்கள் மீட்டு   108ஆம்புலன்ஸ்  மூலம் பென்னாகரம்  அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர்.

இதே போல் அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  5 பேர் ஒகேனக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது தாளப்பள்ளம் என்கிற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தது.

அப்போது எதிர்பாரதவிதமாக  சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,  காரில் வந்த மூன்று பேர் காயத்துடன்  தருமபுரி அரசு மருத்துவக்கல்லுõரி மருத்துவமையின் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டனர். 

ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளின்  வாகனங்கள்  இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த இரு வேறு விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz