சேலம் ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

Thursday 02, May 2019, 19:20:52

சேலத்தை அடுத்த காரிபட்டியை சேர்ந்த ரவுடி கதிர்வேலை போலீசார் என்கவுன்ட்டரில் இன்று சுட்டுக் கொன்றனர்.

சேலம் உதவி காவல் ஆணையரை தாக்கியதால் ரவுடி கதிர்வேல் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது.

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடி கதிர்வேலை கைது செய்ய சென்ற போது, அவர் போலீசாரைத் தாக்கியதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்ய வந்த போலீசாரைக் கத்தியால் ரவுடி குத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியை வைத்து தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரவுடி கதிர்வேலு என்கவுண்டரைத் தொடர்ந்து அவனுடன் இருந்த மூன்று ரவுடிகள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய மூன்று ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz