சேலம்: பெண்களை ஆபாச படம் எடுத்ததாக பியூட்டி பார்லர் மேலாளர் கைது

Thursday 09, May 2019, 18:22:02

சேலத்தில் பியூட்டி பார்லருக்கு வரும் பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்து வைத்திருந்ததாக  பியூட்டி பார்லர் மேலாளர் கைது செய்யப்பட்டார். அதே போல, பியூட்டி பார்லர் மேலாளரை கடத்தி சித்திரவதை செய்த 10 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு இருக்கிறது.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள அழகாபுரம்  சாந்தோம் சூப்பர் மார்க்கெட் பகுதியில் ace (ஏசிஇ) என்ற பியூட்டி பார்லர் உள்ளது. இங்கு மேலாளராக சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த நல்லதம்பி பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே திருமணம் ஆன நல்லதம்பி ரேவதி என்ற பெண்ணுடன் தனியே வசித்து வந்தார். இந்த ரேவதி அழகாபாத்தில் உள்ள டோனி என்ற பியூட்டி பார்லரில் பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பாக நல்லதம்பியை ஒரு கும்பல் பிடித்துச் சென்று அடித்து உதைத்தது. இதை அறிந்த ரேவதி அந்த கும்பலிடம் சென்று தனது கணவனை விட்டு விடுமாறு கூறினார். அப்போது அந்த கும்பல் ரேவதியையும் பிடித்து வைத்துக்கொண்டது.

இந்த கும்பல் ரேவதியிடம் நல்லதம்பி பல்வேறு பெண்களின் ஆபாச புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆபாச புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறிக்கிறார். இதனால் அவரை கடத்தி வந்து இருக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது ரேவதி அந்த கும்பலை சேர்ந்த சிலரை தாக்கி விட்டு தப்பி சேலம் அழகாபுரம் காவல் நிலையம் வந்தார்.

பின்னர் அவர் ஆய்வாளர் சீனிவாசனிடம் தனது காதலனை ஒரு கும்பல் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறது. ஆபாசம் புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டுகிறார்கள் என்று ரேவதி கண்ணீர் மல்க கூறினார் . இதனையடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இவர்கள் விசாரித்து பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வரும் விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் சிவா, வினோத்குமார் ,பிரபாத்,சிவகுமார், விக்னேஷ், அஜித் ,அர்ஜுன் ,தேவா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான விஜயிடமிருந்து பென் டிரைவர் ஒன்றும் ரொக்கம் ரூ 15 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த 15 ஆயிரம் ரூபாய் நல்ல தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாகும். இதுதவிர நல்லதம்பி அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் வைத்திருத்தார். இதனையடுத்து நல்ல தம்பியையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான விஜய் தன்னை ரேவதி தாக்கியதாக புகார் செய்தார் இதனையடுத்து ரேவதியும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நல்லதம்பியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அடைத்து வைத்து சித்திரவதை செய்தல், வழிப்பறி,
பெண்கள் கொடுமை படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மற்றொரு பியூட்டி பார்லரை சேர்ந்த லட்சுமி பிரபா மற்றும் பெரியசாமி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

சேலத்தில் பியூட்டி பார்லர்களில் பணியாற்றுபவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz