"ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

Thursday 09, May 2019, 18:48:53

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் மோகனுக்கு வாக்குகளை சேகரிக்க அந்தத்  தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடுவீடாக நடந்து சென்றும் அந்த பகுதிகளில் வீடுகளில் உள்ள திண்ணைகளில் அமர்ந்து வாக்காளர்களிடம் , அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது....

"தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யபட்ட ஒன்று என்றார் மேலும் ஓட்டப்பிடாரம் பகுதி அதிமுகவின் கோட்டை எனவும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பெரிய பலம் இருக்கின்றது எனவே மற்றவர்களுக்கு இடம் இல்லை" என்றார்.

 "முதல்வர் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார் அவருக்கு கட்சியினர் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் இரட்டை இலை சின்னத்தற்குதான் வாக்குகள் அளிப்போம் என்று உறுதி அளித்தனர் என்றார்.

மேலும் "முதலமைச்சர் உரை ஒரு எழுச்சி உரையாக இருந்தது இந்த பகுதிகளினுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்றும் உறுதியளித்து சென்றார் மற்றவர்கள் உத்திரவாதம் தரலாம் ஆனால் நிறைவேற்ற முடியாது ஆளும் கட்சியால் மட்டும்தான் முடியும் என்று மக்கள் நம்பிக்கையாக உள்ளனர் மேலும் முதல்வர் நான் நிறைவேற்றி தருவேன் என்று சொல்கின்றபோது அவ்வளவு வரவேற்பு இருக்கின்றது என்ற அவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz