திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிடக் கோரி DYFI சார்பில் மனு

Saturday 11, May 2019, 18:17:07

தினம் தினம் பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிட கேட்டும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், சுடுநீர், கழிவறைகள் பயன் படுத்திட அனுமதி, நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை மாற்றிடுவது, செயல்படாத மின் சாதன பொருட்களை பழுது நீக்குவது, வார்டுகளில் நோயாளிகளை கவனிக்க போதிய ஊழியர்களை பணியில் அமர்ந்தக் கேட்டும் DYFI திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற அலைக்கழிக்கும் பயங்கரம் மருத்துவமனையில் பதிவு செய்து ரசீது பெற்று அங்கிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலுள்ள கருவூலம் சென்று பதிவு எண் பெற்று பிறகு சான்றிதழுக்கான தொகையை SBI தலைமை வங்கியில் செலுத்தி பிறகு அரசுமருத்துவமனையில் பதிவு செய்பவரிடம் விண்ணப்பம் செய்தால் சர்வர் வேலை செய்யவில்லையென மக்களை அலைக்கழிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

மருத்துவ மனையின் கட்டிடங்கள் போதிய பராமரிப்பின்றி கழிவு நீர்கள் வெளியே வளாகத்தில் ஓடும் நிலை, தரையில் போடப்பட்டுள்ள டைல்ஸ்கள் நடக்கும் போதே உடையும் நிலையில் உள்ளது.

உடனே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு பராமரிக்க முடியவில்லையென்றால் எங்கள் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் உதவியோடு உழைப்பு தானம் செய்ய அனுமதிக்க கேட்டும் இன்று மனு கொடுத்துள்ளோம். மனுவின் மீது நடவடிக்கையில்லாத பட்சத்தில் மக்கள் இயக்கமாக்கி போராட்ட களம் காணுவோம் என  DYFI அமைப்பினர் தெரிவித்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz