திருச்சியில் சிறார்களுக்காக நடத்தப்பட்ட ஐந்து நாட்கள் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்.....

Tuesday 14, May 2019, 18:32:43

திருச்சி பாலக்கரை, காஜாபேட்டையில் உள்ள ஆலோசனை கர்த்தரே திருச்சபையில் சிறுபிள்ளைகள் பங்குபெறும் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 5 நாட்கள் திருச்சபையின் தலைமை போதகர் சேவியர் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமியர் முகாமில் கலந்து கொண்டனர். இவ்வருடம் "எல்லாமே புதுசு " என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள்
நடைபெற்றது.

இதன் நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறுவர், சிறுமியரின் ஆடல், பாடல், நாடகம் நடத்தினர். சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளும், பயிற்சி வழங்கிய ஆசிரியை, ஆசிரியர்களுக்கு தலைமை ேபாதகர், சேவியர், மற்றும் போதகர் ரோஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகனை உதவி போதகர் ஜான்கண்ணா மற்றும் சபையார், வாலிப குழுவினர் செய்திருந்தனர். முடிவில் முகாம் இயக்குனர் ஜோஸ்பின் நன்றி கூறினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz