திருச்சியில் நடைபெற்ற நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி

Tuesday 14, May 2019, 18:37:14

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் *நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவில் ஒரு ரூபாய் பணத்தாள்கள் இந்திய அரசால் நிதி செயலாளர் கையொப்பமிட்டு வெளியிடப்படுகிறது. ரூபாய் 10 ,20 ,50, 100, 200 ,500,2000 இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிட்டு வழங்கப்படுகிறது.

இந்திய பணத்தாள்கள் நூறு எண்ணிக்கையிலான பணத்தாள்கள் ஒரு கட்டாக வெளிவருகிறது. பணத்தாள்கள் அச்சிடும் பொழுது ஏற்படும் பிழை காரணமாக அதில் எத்தனை பணத்தாள்கள் பிழையாக உள்ளதோ அவற்றுக்கு மாற்றாக நட்சத்திர குறியீடு உடன் பணத்தாள்கள் வெளியிடப்படுகிறது.

அப்பணத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணின் முன்புறம் நட்சத்திர குறியீடு இருக்கும். பணத்தாள்களை முகமது சுபேர் காட்சிப்படுத்தி விளக்கினார்.

2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நட்சத்திர குறியீடு அச்சிட்டு வெளிவருகிறது .2006 ஆம் ஆண்டு ஒய் வி ரெட்டி, சுப்பாராவ், ரகுராம்ராஜன் முதற்கொண்டு தற்போது வரை ஆளுநர்கள் கையப்பமிட்டு பணத்தாள்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

முன்பு பணத்தாள்களின் வலது புறம் மேலும் இடது புறம் கீழும் ஆறு இலக்க எண்கள் முன்பு *நட்சத்திர குறியீடு இடம் பெற்றிருக்கும். தற்போது இடது புறம் மேலும் வலது புற கீழும் ஏறுவரிசையில் எண்கள் அச்சிட்டு வெளிவருகின்றன.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகாஆசிரியர் விஜயகுமார் ,செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், பாண்டியன், ராஜேஷ் , சுவாமிநாதன், மன்சூர் ,அரிஸ்டோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz