தூத்துக்குடி: "கமல்ஹாசன் ஐஎஸ் அமைப்பில் இருந்து பணம் வாங்கி விட்டாரா?" அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி

Tuesday 14, May 2019, 21:19:39

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது....

"மக்கள் நீதி மய்யம் என்ன ஐநா சபையின் ஒரு அமைப்பா? இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலையை செய்கிறார். தேவையின்றி கமல்ஹாசன் பேசுவது ஏன்? இது நாட்டிற்கு ஆபத்து.

தீவிரவாதத்தை, பயங்கரவாத்த்தை தூண்டக்கூடிய பேச்சு, அதனை அவர் திரும்பி பெற வேண்டும், திருத்தி கொள்ள வேண்டும். பிரிவினை வாதத்தை, மதபிரச்சனையை தூண்டக்கூடிய இந்த கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் கிள்ளி எறிய வேண்டும்.

கமல்ஹாசன் ஐஎஸ் அமைப்பில் இருந்து பணம் வாங்கி விட்டாரா என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். அவரை இயக்குவது யார் என்பதை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அவர் செய்த தவறை மறைப்பதற்காக அறிக்கை விடுகிறார்.

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றவர், ஒரு மனைவி இருக்கும் போது அவருக்கு தெரியமல் மற்றொருவரை திருமணம் செய்தது - என பல்வேறு தவறுகளை செய்து விட்டு இது போன்று பேசுவது சரியல்ல.

கே.எஸ் அழகிரி தமிழகத்தில் இருப்பதற்கு தகுதி கிடையாது. இங்கிலாந்துக்கு தான் செல்ல வேண்டும் 

மு.க.ஸ்டாலின் பாஜக இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பேசி கொண்டிருக்கிறார். அரசியலில் நம்பகத்தன்மை இல்லாதவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார், ஒரு படம் எடுத்து அதில் முதல்வராக நடிக்க வைத்து விடலாம்" என்று கூறினார் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz