தற்கொலை செய்து கொண்ட ஆத்தூர் நிதி நிறுவன அதிபரின் வீடியோ மரண வாக்குமூலம் - முழு விபரம்

Wednesday 15, May 2019, 16:27:31

சாதியைச் சொல்லித் திட்டியதாகப் பொய் வழக்குப் பதிந்து விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் தந்த ஆத்தூர் போலீசுக்குப் பயந்து நிதி நிறுவன அதிபர் பிரேம்குமார் இன்று காலை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக தனது மரணத்துக்கான காரணங்களை பேசி அதை வீடியோவாகத் தனது மொபைலில் பத்தி செய்துள்ளார் பிரேம் குமார். அதனையே தனது மரண வாக்குமூலமாகவும் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளார். 

சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி பரபரப்பினை ஏற்படுத்தி வரும்  நிதி நிறுவன அதிபர் பிரேம்குமாரின் மரண வாக்குமூல வீடியோவின் முழு விபரம்:

“பிரேம்குமார் ஆகிய நான் ஆத்தூர் விநாயகபுரம் 4ஜி நேதாஜி நகரில் ஸ்ரீ தனலட்சுமி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறேன். அதில் பணம் பெற்றுக் கொண்டு என்னை பலபேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் குட்டி என்கின்ற ராஜ்குமார் நான் திட்டாத, நான் பேசாத வார்த்தைகளை - ஜாதியைப் பத்தி திட்டினேன்; எஸ்.சி.யைப் பத்தித்  திட்டினேன் என்று கூறி எனது பெயரிலும் எனது தம்பி வி.ஜி.செந்தில்குமார் பெயரிலும் ஆத்தூர் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து ஆத்தூர் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் மற்றும் சாத்தூர் பாக்கியராஜ் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் இந்த குட்டி என்கிற ராஜ்குமாருடன் சேர்ந்து எங்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவுசெய்து என்னை என்னையும் எனது தம்பியையும் PCR கேசில் புக் செய்து FIR  போட்டு விட்டார்கள்.

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். அரசாங்கப் பதிவு பெற்ற பைனான்சில் என்னிடமிருந்து ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாயை - 50,000 ஒன்று 75,000 ஒன்று என இரண்டு கணக்கு வாங்கிக் கொண்டு ஒரு கணக்கு மட்டும்தான் வாங்கினேன் என்று குட்டி என்கிற ராஜ்குமார் அதுவும் வெறும் 12 ஆயிரம் மட்டும் செலுத்தி விட்டு, முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன் என்று ஏமாற்றிவிட்டு, இரண்டாவதாக வாங்கிய அவனும் அவனுடைய மனைவி அவனுடைய மாமியார் மூவரும் சேர்ந்து வாங்கிய 75,000 ஐ பணம் வாங்கவே என்று வாங்கவே இல்லை என்று கூறி எங்கள் மீது பொய் புகார் கொடுத்து நாங்கள் அவனை ஜாதி பெயர் சொல்லி திட்டினேன் என்றும் போய் சாவுடா என்று கூறினேன் என்றும் பொய்யான புகார் கொடுத்து அதற்கு உடந்தையாக சாத்தை பாக்கியராஜ் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவரை உடன் சேர்த்துக் கொண்டு ஆத்தூர் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகிய இருவரும் சேர்ந்து எனது பேரிலும், எனது தம்பி வி.ஜி.செந்தில்குமார் பெயரிலும் FIR போட்டு விட்டார்கள்.

நாங்கள் அப்படிப் பேசவே இல்லை என்று பலமுறை சொல்லியும், அவர்கள் தீர விசாரிக்காமல் அவனிடம் உன்கிட்ட இருக்கிற டாக்குமெண்ட் எல்லாத்தையும் திருப்பிக் கொடு. அவங்கிட்ட இனிமே பணம் எதுவும் கேட்க மாட்டேன்னு சொல்லு அப்படின்னு எங்கள் இருவரையும் மிரட்டி இன்று 10 மணிக்கு “முதல்ள டாக்குமெண்ட்டக் கொண்டு வந்து கொடு.... இல்லையானா FIR போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்” என்று இருவரும் மிரட்டுகிறார்கள்.

அது மட்டுமல்ல, நயவஞ்சகர்கள் பல பேர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் முதலில் என்னை ஏமாற்றியவன் டிடி இளையராஜா. ஸ்ரீநிதி நிதி நிறுவனம் என்று நான் பாஸ்கர் சதீஷ் சத்யா முருகானந்தம் செந்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து நிதிநிறுவனம் நடத்தி வந்தோம். அதில் முதலில் எங்களை ஏமாற்றியது டிடி இளையராஜா. எங்களுடைய மூலதனமான பணம் ஐந்து லட்சமும் அதில் வந்த லாபத்தையும் ஏமாற்றி விட்டார்.

அடுத்து எங்களை ஏமாற்றியவன் தாண்டவராயபுரத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தங்கமணி என்ற தங்கவளவன். என்னிடம் 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கிட்டத்தட்ட நான்கு வருஷம் ஆகிறது. முடிஞ்சா உன்னால வசூல் பண்ணு. இல்லையா நான் உன்மேல ஜாதி பெயர்  சொல்லி திட்டினதாக் கம்ப்ளைண்ட் கொடுத்து உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டுகிறான்.

அதுமட்டுமல்ல, புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ராமதாஸ் சக்திவேல் இருவரும் 75,000 ரூபாய் வாங்கி 4 வருடம் ஆகிறது. அதுவும் என்னை ஏமாற்றி விட்டார்கள். கோர்ட்டில் கேஸ் போட்டு அது case judgementம் ஆகிவிட்டது. இன்னும் பணத்தை தரவில்லை. மற்றும் என்னை ஏமாற்றியவர்கள் ஜாபர் ஒன்றரை லட்சம் - நான்கு வருடம் ஆகிறது எதுவும் பணம் தராமல் ‘உன்னால முடிஞ்சா வாங்கிக் கொள்’ அப்படிங்கிறான்.

அடுத்து என்னிடம் பணம் வாங்கியவர்கள் என்னை ஏமாற்றியவர்கள் ஜாபர் ஒன்றரை லட்சம் நான்கு வருடமாகிறது. நல்லதம்பி ஐம்பதினாயிரம் வாங்கி நான்கு வருஷம் ஆகிறது. குமார் தங்கமணி என்கிற தங்கவளவன்  ஜாமீன் போட்டு வாங்கி கொடுத்தது 1 லட்சம் - அது நாலு வருஷம் ஆகிறது. சரண் கஜாவுடைய மகன் ஒன்றரை லட்சம், நிரேஷ் என்பவர் ஜாமீன் போட்டு அவனுக்கு வாங்கி கொடுத்தான். அவனும் என்னை ஏமாற்றி விட்டான்.

பைனான்ஸ் மாணிக்கம் வீட்டில் எதிர் வீட்டில் குடியிருக்கும் அரவிந்தன் என்னுடைய பைனான்சில் வேலை செய்து கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் என்னிடமிருந்து திருடிச் சென்று விட்டான். பைனான்ஸ் மாணிக்கம் வீட்டுக்கு பின்னால் குடியிருக்கும் முறுக்கு வியாபாரம் செய்யும் சேட்டு என்ற புனிதா அவர்கள் 2 லட்சம் எங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு இதுவரை திரும்ப தரவில்லை.

அண்ணாதுரை மேஸ்திரி முருகன் மேஸ்திரியிடம் வேலை செய்பவர் அவர் என்னிடம் ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்டு நான்கு வருஷம் ஆகிறது, இதுவரை வரவில்லை. சரவணன் ஜோதிமில் தெருவில் குடியிருக்கிறான். அவன் 50,000 பெற்றுக்கொண்டு இதுவரைக்கும் என்னிடம் பணம் தரவில்லை நாலு வருடம் ஆகிறது.

சௌந்திரவேல்  நரசிங்கபுரம் ராஜ்குமார் ஆட்டோ ஓட்டுபவர் ஜாமீன் போட்டு வாங்கி கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி கொடுத்த 4 வருடம் ஆகிறது இது வரைக்கும் திருப்பித் தரவில்லை அதேபோல் ராஜ்குமாரும் என்னிடம் பணம் வாங்கி விட்டது திருப்பித் தரவில்லை. சௌந்தரராஜன் போட்டு குமார் நரசிங்கபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சுமார் 50000 வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார்கள்.

இது போல இன்னும் பல பேர் என்னை ஏமாற்றி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி என்னை மன உளைச்சலால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.

இந்த மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ஆத்தூர் காவல் துறை. தக்க நடவடிக்கை எடுக்காமல் எல்லார் வீட்டுக்கும் கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார். இது எல்லாத்துக்கும் சாட்சி என்னுடைய வக்கீல் இருக்கிறார் கோர்ட்டில் கேஸ் போட்டு சம்மன் போட்டும் எதுவும் நடவடிக்கை இல்லை இது எல்லாத்துக்கும் முழுக்க முழுக்க காரணம் ஆத்தூர் காவல் துறை. இப்போது என்னையும் எனது தம்பியும் PCR கேஸ் போட்டு மிரட்டி வருகிறார்கள். இந்த மன உளைச்சலால் நான் சாகப்போகிறேன். இதையே எனது மரண வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளவும்.

அது மட்டும் இல்லை எனக்கு என்னுடைய நண்பர்களான பாலிமர் சேகர், பாரதி பிரபு, வோடோபோன் கார்த்தி மற்றும் எனது வக்கீல்கள் மட்டும் ஹைகோர்ட் வக்கீல் ராஜா மற்றும் எனது சைனிக் ஸ்கூல் நண்பர்கள் அனைவரும் என்னை ஏமாற்றிய இந்த நபர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து என் குடும்பத்தாரிடம் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பெரிய மகன் சின்ன மகனுக்கு ஒரு வேண்டுகோள்: இந்த சமுதாயம் ஒழுங்காக வேலை செய்பவர்களைப் பிழைக்க விடாது. இந்த பணத்தை எல்லாம் வசூல் செய்துவிட்டு சின்னவன் பி எல் படித்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருக்கும் காப்பாற்றுமாறு அவனை பிஎல் படிக்க வைக்கவும். பிஎல்  படிக்க வைத்து என்னுடைய வக்கீலான ஹைகோர்ட் லாயர் எனது நண்பரும் வக்கீலுமான ஹைகோர்ட் ராஜா அவர்களிடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்றிய என்னை போல் எஸ் சி பொய் வழக்குகளால்  பாதிக்கப்பட்டவர்களை அந்த நயவஞ்சகர்களிடமிருந்து காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கறேன்.

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு நீ எதுவும் செய்ய வேண்டாம். அவரைப் போய் பண்றேன். இவரைப் போய்ப் பண்றேன்னு எதையும் செய்ய வேண்டாம். சட்டப்படி என்னுடைய நண்பர்கள் எல்லாம் இதை பார்த்துக் கொள்வார்கள். நீ எதுவும் செய்ய வேண்டாம் நீ படித்த ஆளாகி நல்ல இந்த மாதிரி நயவஞ்சகம் பண்ணும் நபர்களிடம் இருந்து மற்றவர்களை காப்பாற்றவும். பெரிய பையன் நல்லா படித்து நல்ல வேலையில் அமர்ந்து வீட்டைப் பார்த்துக் கொள்ளவும்

இதுவே எனது மரண வாக்குமூலமாக கொடுக்கிறேன். இதை எனது நண்பர்கள் அனைவரும் இதுக்கு முன் நின்று எடுத்து எனக்கு உதவுவார்கள் என்று முழு நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து பிரியா விடை பெற்று நான் என் மரணத்தைத் தழுவுகிறேன்" என்று பேசி முடித்து விட்டு பிரேம்குமார் தனது மொபைலை அனைத்துவைக்கும் காட்சி இறுதியாகப் பதிவாகியுள்ளது.

நிதி நிறுவன அதிபர், தனது மரணம் குறித்து வீடியோவில் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz