"அ.இ.அ.தி.மு.க. என்பது மாநிலக் கட்சி" – சேலத்தில் அதிர வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Monday 20, May 2019, 21:51:12

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழநிசாமியைச் சத்தித்த செய்தியாளர்கள் அவரிடம் தமிழகத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் குறித்துக் கேட்டனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர்,  கருத்துக் கணிப்பு என்பது தன்னைப் பொறுத்தவரையில் அது கருத்து திணிப்பே என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்ட கருத்து கணிப்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தான் தோற்றுப் போனதாகக் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின என்றும் ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில்  42,000 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்த அவர், தற்போதும் கருத்துக் கணிப்புகளை மீறி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

அகில இந்திய அளவில் பாஜக வெற்றி பெறும் என்று வெளியாகியுள்ள கருத்துக்  கணிப்புகளுக்கு இது பொருந்துமா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் மாநிலக் கட்சி என்பதால் தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்" என்று கூறி அதிர வைத்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாநிலங்களிலும் இயங்கி வரும் ஒரு அகில இந்தியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரே அக் கட்சியினை மாநிலக் கட்சி என்று கூறி இருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz