38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியைக் கைப்பற்றிய தி.மு.க.!

Friday 24, May 2019, 18:56:08

1980-க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றுகிறது.

1952-ம் ஆண்டு முதல் 2014 வரையிலான சேலம் பாராளுமன்ற தேர்தல்களில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு முறை சுயேட்சையாகவும் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
1980-க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

சேலம் – தி.மு.க. வெற்றி!

எஸ்.ஆர்.பார்த்திபன் - திமுக - 5,96,803
கே.ஆர்.எஸ்.சரவணன் - அதிமுக - 4,53,421
ராஜா அம்மையப்பன் - நாதக - 33,528
எஸ்.கே.செல்வம் - அமமுக - 51,691
பிரபு மணிகண்டன் - மநீம - 58,315

மீட்டெடுக்கப்பட்டுள்ள வெற்றியினால் தி.மு.க. தொண்டர்கள் பேருமகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz