"தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது" - ரஜினிகாந்த் கோரிக்கை

Tuesday 28, May 2019, 18:42:04

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மோடிக்கு எதிரான அலை வீசியதால் பா.ஜ.க. தோல்வியைத் தழுவ நேர்ந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்துள்ள வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி; பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்; கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் நிதின் கட்கரி கூறி இருப்பதை வரவேற்கிறேன்.

காங்கிரஸ் கடுமையாக உழைக்கவில்லை. காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்களை எப்படிக் கையாள்வது என்று ராகுல் காந்திக்குத் தெரியவில்லை.

ராகுல் காந்தி பதவி விலக முன்வந்திருப்பது அவரது இயலாமை அல்ல; காங்கிரஸ் போன்ற பழமையான கட்சியில் மூத்த தலைவர்களை கையாள்வது மிகவும் கடுமையான பணி எனக் கூறிய ரஜினி, தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது தொடர்ந்து அரசியலில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz