சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

Tuesday 28, May 2019, 19:04:56

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சபாநாயகர் அறையில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதையடுத்து திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது. இதனை தவிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தமாக திமுக கூட்டணியின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது.

திமுக உறுப்பினர்கள் இன்று பதவியேற்றதை தொடர்ந்து, நாளைய தினம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் தலைமையில் பதவியேற்க உள்ளனர்.

அதிமுகவில் ஏற்கனவே சபாநாயகர் உட்பட 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் தற்போது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை சேர்த்து அதிமுகவின் பலம் தற்போது மொத்தமாக 123ஆக உள்ளது.

பதவிப் பிரமாணம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் "சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எவ்வாறு செயல்படுவோம் என்று நீங்களே பார்ப்பீர்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொறுரை சட்டமன்றம் கூடும்  தேதி அறிவித்தபின், அவை கூடும்போது முடிவெடுப்போம். பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz