ஜமால் முகமது  கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி

Tuesday 11, September 2018, 16:26:55

திருச்சி ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக புதிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பொருளாளர் ஹாஜி எம்.கே.ஜமால் முகமது, கல்லூரியின் கூடுதல் துணை முதல்வர் எம். முகமது சிகாபுதின் மற்றும் பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் மேஜர் எம்.அப்துல் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. லட்சுமி பிரபா, திருச்சி மாவட்ட இளையோர் நல ஒருங்கிணைப்பாளர் கே.சுப்ரமணியம் (நேரு யுவ கேந்திரா) ஆகியோர் கலந்து கொண்டு 'தேச முன்னேற்றத்தில் நாட்டு நலப்பணி மாணவர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம.காமராஜ்,  முனைவர் மு.அன்வர் சாதிக், அ. அக்பர் அலி, ஃபைஸ் பாஷா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்பட பலரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz