புதிய ஆடிட்டோரியம் கட்ட கட்டாய பண வசூல் - திருச்சி கேம்பியன் பள்ளி மீது புகார்!

Saturday 08, June 2019, 19:42:20


திருச்சியில் பெரும் வசதி படைத்தவர்களின், அரசின் ஆளுமை வர்க்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே பயிலக்கூடிய, திருச்சியில் பணக்கார பள்ளி எனப் பெயர் பெற்றது கேம்பியன் பள்ளி. ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தின் கீழ் இருந்த இப்பள்ளி சமச்சீர் கல்வி திட்டம் வந்த பிறகு தற்போது மாநில கல்வித் திட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் படித்து முடித்து விட்டு வேறு பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ செல்லும் 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சான்றிதழ் வாங்க வரும்போது முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் புதிய ஆடிட்டோரியம் கட்ட 1500 ரூபாய் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

Dear Student, Please remit a sum of Rs 1500/- towards COBA Membership & Auditorium fund, When you collect your Mark sheet from school. COBA Secretary
தற்போது இந்த விவகாரம் தற்போது மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருஷ்ணனிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த புகார் குறித்து கேம்பியன் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் கிஷோர் குமார் கூறுகையில்; 100 அல்லது 200 ரூபாய் என்றால் கூட பரவாயில்லை. 1500 ரூபாய் என்பது நியாயமில்லாதது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூல் செய்த தொகையை உடனடியாக பள்ளி நிர்வாகம் சம்மந்தப்பட்ட பெற்றோருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz