ஆசிரியர் தகுதித்தேர்வில் 6,864 பேர் பங்கேற்பு; சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்ப்பு தீவிரம்

Saturday 08, June 2019, 19:51:25

ஆசிரியர் தகுதித் தேர்வில் இன்று நடைபெற்ற முதல் தாளுக்கான தேர்வில் 6,864 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 ஆகிய தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

அதன்படி இன்று தாள்-1க்கான தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் நடைபெறும் தேர்வில் 6 ஆயிரத்து 864 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் மாற்றுத்திறனாளிகள் 121 பேர் கலந்துக்கொண்டனர். தேர்வு பணியில் 19 முதன்மை கண்காணிப்பாளர்கள், 19 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 19 துறை அலுவலர்கள், 19 கூடுதல் துறை அலுவலர்கள், 144 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு நடைபேறும் மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையில்லா மின்சாரம், காவல்துறையின் மூலம் பாதுகாப்பு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக சேய்துகொடுக்கப்பட்டது.
   eng

பின்னர் திருச்சி மாவட்டம் சேதுராபட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.

உயர் கல்வித் துறை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (7.6.2019) முதல் (12.6.2019) வரை நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு காலை 9.மணி முதல் மாலை 6.மணி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் வட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் 2700 மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர்.வி.எம்.சாந்தி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு துணை ஒருங்கிணைப்பாளர் வனிதா, மணப்பாறை வட்டாட்சியர் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz