காவல்துறை சார்பில் ரூ.1.18 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்; அமைச்சர்கள் திறந்து வைப்பு

Tuesday 11, June 2019, 00:45:06

திருச்சி மாநகரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் மூலம் 1.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிபணிகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமை தாங்கினார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், திருச்சி காவல் ஆணையர், முனைவர் அ.அமல்ராஜ், மத்திய மண்டல காவல் துறைத்தலைவர் வெ.வரதராஜு, முன்னால் மக்களவை உறுப்பினர் ப.குமார் ஆகியோர் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பல்நோக்கு கட்டடம் மற்றும் ரவுண்டானவை திறந்து வைத்து பேசியதாவது: திருச்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளுர் வளர்ச்சி நிதியிலிருந்து 2017,2018 ஆம் ஆண்டில் ரூ.85.00 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகரில் பல்நோக்கு கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாநகர ஆயுதப்படையில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.22.70 லட்சம் மதிப்பீட்டில் மின்னொளி கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஊர் காவல்படை சார்பாக ஊர் காவல்படை வட்டார தளபதி சிராஜுதீன் சொந்த நிதியிலிருந்து ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

ஜமால் முகமது கல்லூரி அருகில், கல்லூரி நிறுவாகத்தின் நிதியிலிருந்து ரூ.6.70.லட்சம் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் குளிர்சாதன வசதிகொண்ட பயணியர் நிழற்குடை மற்றும் பல்நோக்கு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி ATM மையம் ஆகியவை மாநகர வளர்ச்சிக்காக, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

min

திருச்சி மாநகராட்சி இந்தியாவிலேயே வாழ்வதற்கு உகந்த மாநகராட்சியாகவும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் மாநகராட்சியாகவும் சிறந்து விழங்குகிறது. தமிழ்நாட்டிலேயே திருச்சி மாநகராட்சி தூய்மையை கடைபிடிக்கும் முதன்மை மாநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி இந்த சிறப்பு அம்சங்களை பெறுவதற்கு திருச்சி காவல் ஆணையரும், மாவட்ட ஆட்சித் தலைவரும், மாநகராட்சி ஆணையரும் ஒருங்கிணைந்து செயல்பட இயற்கையான, நேர்த்தியான, எழில்மிகுந்த மாநகராட்சியாக திருச்சி உருவாகி வருகிறது.

திருச்சி மாநகரத்தில் மக்கள் நலம் பெறும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்டத்திற்கு என்னென்ன மக்கள் நல திட்டங்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து பல இடங்களில் மாநகராட்சியின் மூலம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி அமைக்கப்பட்டுள்ளது.

மாநகரம் முழுவதும் குற்றங்களை களைவதற்கும், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் சுமார் 1000 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இன்னும் பல நல்ல திட்டப்பணிகள் செயல்படுத்துவதற்கு முயற்ச்சியெடுத்தால் அரசின் சார்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று திருச்சி மாநகரம் எழில்மிகு நகரமாக உறுவவதற்கு நாங்கள் உறுதுனையாக இருப்போம் எனத்தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் என்.எஸ்.நிஷா, குற்றம் மற்றும் போக்கு வரத்து காவல் துணை ஆணையர் ஆ.மயில்வாகனன், திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன், ஜமால் முகமது செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஏ.கே.காஜா நஜீமுத்தீன், ஊர் காவல் படை வட்டார தளபதி அல்.சிராஜீத்தீன், அரியலூர் ராம்கோ சிமெண்ட் துணைத்தலைவர் ச.ராமராஜ், ராம்கோ சிமெண்ட் உதவி துணைத்தலைவர் சி.ரவிச்சந்திரன், ஐசிஐசிஐ வங்கி மண்டல முதன்மை அதிகாரி இராகவேந்திர வெங்கடகிரி, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி தலைவர் எஸ்.சகாதேவ்பாண்டின், அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் ஏர்போர்ட்விஜி மற்றும் காவல்துறை அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz