திருச்சி: ஆட்சியர் அலுவலக வாயிலில் கஞ்சித்தொட்டி திறந்த விவசாயிகள்

Tuesday 11, June 2019, 00:50:53

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் திரளாக பல்வேறு கோரிக்கை மனுக்களோடு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தண்ணீர் இல்லாமல் விவசாயத்தில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் வங்கி அலுவலர்கள் விவசாயக் கடனை திரும்பக் கேட்டு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிடக்கோரி சமாதானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறியதாவது;

"தமிழ்நாடை வறட்சி பாதித்த மாநிலம் என அரசு அறிவித்துவிட்டது. சாகுபடி செய்த பயிர்கள் தன்ணீர் இல்லாமல் கருகி அழிகிறது. வறட்சி நிறைந்த சூழலிலும் வங்கி அலுவலர்கள் கடன்களைக் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனைக் கண்டித்து கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படுகிறது.

முதலமைச்சர் பழனிசாமி 14-ஆம் தேதி திருச்சி வருகிறார். எங்களுடைய கோரிக்கையை ஏற்று கடன் தள்ளுபடி செய்வார் என நம்புகிறோம். விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடைபெறும்" என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz