திருச்சி: சமூக நலக்கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம்

Tuesday 11, June 2019, 01:08:02

திருச்சி மாவட்ட சமூக நலக் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்.குணசீலன் தலைமையில் திருச்சி மேலப்புலிவார்டு சாலையில் உள்ள மத்வா அரங்கில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் தமிழகன், பெ.அய்யாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் சரவணன், வின்சென்ட் ஜெயக்குமார், கோவிந்தசாமி, சம்சுதீன், வழக்றிஞர் பிரகாஷ், செல்லக்குட்டி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ce

கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதியதாக பொறுப்பு ஏற்றிருக்கும் திருச்சி, பெரம்பலுர், கரூர், மக்களவை ஊறுப்பினர்களின் பணி சிறக்க கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அனைவரது மத்தியில் கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும்.
2. கழிவு நீரை கால்வாய், ஆறுகளில் கலக்க விடாமல் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்.
3. அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
4. பத்து வருடங்களுக்கு மேலாக முடங்கி கிடக்கும் துவாக்குடி முதல் அந்தநல்லூர் வரையிலான அரைவட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
5. ஸ்ரீரங்கம் வட்டத்தை பிரித்து பொதுமக்களின் நலத்தை கருத்தில் கொண்டு பெட்டவாய்த்தலை தனி வட்டமாகவும் மற்றும் முசிறி அலகரை ஊராட்சியை பிரித்து கோடியம்பாளையம் தனி ஊராட்சியாகவும் அமைக்க வேண்டும்.

cve
6. காந்தி சந்தை பகுதியில் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதிப்படையாதவாறு போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்.
மேற்கண்டவாறு பல்வேறு முக்கிய தீர்மானங்களுடன் திருச்சி மாவட்டத்தில் இயங்கும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்த சமூக நலக்கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz