திருச்சி தேசியக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Tuesday 11, June 2019, 01:33:48

திருச்சி தேசியக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க்கும் கூட்டம் நேற்று காலை கல்லூரியின் உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் இளநிலை முதலாமாண்டு மற்றும் முதுநிலை முதாலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது. இதல் சுமார் 1500 க்கும் மேற்ப்ட்ட மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

விழாவின் தொடக்கமாக, கல்லூரியின் செயலர், முதல்வர், தேர்வு நெரியாளர் , துனை முதல்வர்கள் மற்றும் புலன் முதன்மையர்கள், மேலும் புது மாணவ, மாணவியுடன் ஒரு பெற்றோரும் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

அதில் முதல்வர் அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் சிறப்பு அம்சங்களைபற்றி எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகளை நன்கு படிக்குமாறு வலியுறுத்தினார். இம்மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை புத்தாக்கப்பயிற்சி புது மாணவர்களுக்கு நடக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
பேரா.முனைவர் சா. நீலகண்டன் கல்லூரியின் வரலாற்றினை புது மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றொறுக்கும் எடுத்துரைத்தார்.

மாணவர்களுக்கான கூட்டம் முடிந்து பெற்றோர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தினை பேரா.முனைவர் புவனேச்வரி தொகுத்து வழங்கினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz