முறைகேடாக கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை - கரூர் எஸ்.பி. விக்ரமன் பேட்டி.

Tuesday 11, June 2019, 22:13:38

கரூரில் சட்டதிட்டங்களை மீறி முறைகேடாக கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேட்டி.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் அதிகம் வந்த வண்ணம் இருப்பதால் அது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கரூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது,
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கரூரில் கந்து வட்டி புகார் அதிக அளவு வந்துள்ளது. கந்து வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என்று சட்ட திட்டங்களை மீறி வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பதிவு பெறாத நிதி நிறுவனங்கள் அதிக அளவு கரூரில் செயல்பட்டு வருவது தெரிகிறது. உடனடியாக பதிவு பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் வேலை வாங்கித் தருவதாகவும் மற்றும் கடன் பெற்றுத் தருவதாகும் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்

கரூர் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz