இந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

Wednesday 19, June 2019, 18:30:52

இந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்தி, சமஸ்கிருத திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திருச்சி, லால்குடி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ராஜ், மகளிர் பாசறைத் தலைவி அம்பிகா கணேசன், செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz