திருச்சி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்கச் சிறப்புக் கண்காணிப்புக் குழு - ஆணையர் அறிவிப்பு!

Thursday 20, June 2019, 19:08:04

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் நடப்பதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு ஒன்றை நியமனம் செய்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் ந.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூரியதாவது:

திருச்சி மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான முறையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய கண்காணிப்பு குழு மற்றும் ஆய்வுகுழு மாநகராட்சி ஆணையரால் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் , ஊரகவளர்ச்சி மற்றும் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.

அதன்படி மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நகரபொறியாளர் மற்றும் நகர்நல அலுவலர் தலைமையில், செயற்பொறிளார்கள், உதவி செயற் பொறியாளர்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

cs
மேலும், வார்டு ஒன்றிற்கு ஒருவர் வீதம் 65 வார்டுகளுக்கு 65 நபர்கள் அடங்கிய கள ஆய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இந்தக்குழுவில் பணிகளை மேற்கொள்வார்கள். பொதுமக்களின் குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகளை அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உடனுக்குடன் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகங்களில் தெரிவிக்கலாம். தொலைபேசி எண்கள்- ஸ்ரீரங்கம் கோட்டம் 0431 -2432255, அரியமங்கலம் கோட்டம் 2467615, பொன்மலை கோட்டம் 2319844, கோஅபிசேகபுரம் கோட்டம் 2772098 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.

பின்னர் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 37-வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ந,இரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ரவீந்திரனுடன் சென்று அப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை ஆய்வு மேற்கொண்டார்.

அப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தேவையான குடிநீர் வருகிறதா என்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு குடிநீர் விநியோகம் செய்வதை பார்வையிட்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்மாறும், குடிநீர் அல்லாத பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்கும்மாறும் கேட்டுக் கொண்டார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz