ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

Saturday 22, June 2019, 20:46:33

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.

கல்லூரி இயக்குனர் ராமானுஜம் தலைமை உரையாற்றி பேசுகையில்; பதஞ்சலி முனிவரால் யோக சூத்திரம் இயற்றப்பட்டது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி உள்ளிட்ட எட்டுப்படி நிலைகளை அஷ்டாங்க யோகம் என்பர். இப்படி நிலை உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் பேணிப் பாதுகாக்கிறது என்றார்.

கல்லூரி முதல்வர் ராதிகா தனது சிறப்புரையில்; சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த தினமானது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் ஐக்கிய நாட்டு சபைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. யோகாவால் மனம் ஒருநிலைப்பட்டு தனிமனித ஆரோக்கியம் மேம்படுகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் பிச்சைமணி, இயற்பியல் துறை தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி யோகா ஆசிரியர் விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு யோகா ஆசனங்கள் பிராணாயாமம் தியானப் பயிற்சி அளித்து விளக்கினார்.

வங்கி மேலாண்மைத் துறை தலைவர் சபி, மோகன் உட்பட பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் யோக பயிற்சியில் பங்கேற்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz