இந்திய வரைபடத்தில் அமர்ந்து 20 ஆசனங்கள் 21 நிமிடத்தில் அசத்திய மாணவர்கள்

Saturday 22, June 2019, 20:48:55

நாடெங்கும் நேற்று உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் யோகப் பயிற்சி நடைபெற்றது.

அந்த வகையில் திருச்சி உய்யகொண்டான் திருமலை மவுண்ட் லிப்ரா ஜி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தில் நின்று யோகா செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

y
இந்திய வரைபடத்தில் அமர்ந்து 1,800 மாணவ-மாணவிகள் பத்மாசனம், பத்ம மயில் ஆசனம், வஜ்ராசனம், சித்தாசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 20 ஆசனங்களை 21 நிமிடத்தில் செய்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழுமத் தலைவர் ராமமூர்த்தி, பாஜக மாநில துணைத்தலைவர் காந்தி, ருத்ர சாந்தி யோகாலயா கிருஷ்ணகுமார், பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தின் முதன்மை நடுவர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz