நடிகர் விஜய் பிறந்தநாள் - திருச்சியில் உற்சாகம்

Saturday 22, June 2019, 20:55:27

நடிகர் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் தனது 10-வது வயதில் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1988ஆம் ஆண்டு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய இது எங்கள் நீதி படம் வரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

பின்னர் தனது 18 வயதில் எஸ்ஏ சந்திர சேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து தனது தந்தை இயக்கத்திலேயே நடித்து வந்த விஜய்க்கு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது.

இதுவரை நடிகர் விஜய் 62 படங்களில் நடித்துள்ளார். தனது 63-வது படமான பிகில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய் இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார்.

vija

தமிழில் முன்னணி கதாநாயகரான விஜய், சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறப்பாக நடனம் ஆடும் திறமையும் பாடும் திறமையும் கொண்டவர். தொடக்க காலத்தில் தனது படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது விஜய் பாடிவிடுவார்.

நடிகர் விஜய்க்கு இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக குழந்தை ரசிகர்கள் மற்ற ஹீரோக்களை காட்டியும் விஜய்க்கு அதிகம் என்றும் உறுதியாக கூறலாம்.

இந் நிலையில் விஜய் தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

vi

திருச்சியில் நேற்று முன்தினம் முதல் விஜய் பிறந்தநாளை 3 நாட்களாக அவரது ரசிகர்கள் திருச்சி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரத்ததான முகாம், குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கோயில்களில் அன்னதான என வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாமும் நடைபெற்றது.

ve

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி டாக்டர் புவனேஸ்வரி, பாலசந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவி.வெற்றிசெல்வன், மாவட்ட நிர்வாகிகள் ரஹ்மான், ஜீவா, ராஜேஷ், அருள்விஜய், சுரேஷ், சிவா, கலைவாணன், ஞானவேல், லால்குடி லோகு, ரஜினிமுருகன், சரண்ராஜ், செபாஸ்டின், மணிகண்டம் ஓன்றிய தலைவர் பாலு, புஷ்பராஜ், அமுல், துறையூர் நகரம் தினேஷ், புள்ளாம்பாடி ஒன்றியம் மணிவண்ணன், மாவட்ட மகளிரணி தீபா, சத்யா, மாவட்ட மாணவரணி நவீன், வசந்த், பாலக்கரை பகுதி தலைவர் அலெக்ஸ், அரியமங்கலம் பகுதி தலைவர் நாகேந்திரன், காஜாமலை பகுதி செயலாளர் சுப்பிரமணி, புத்தூர் நடராஜன் உள்பட ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் கொடுத்தனர். இறுதியில் இரத்ததான முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz