"நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்" - மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தல்!

Monday 24, June 2019, 21:09:48

"நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்" - என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்த முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர்களின் வெறும் 6 லட்சம் பேர் மட்டும்தான் தேர்வாகி உள்ளனர் என்றும், இந்த 6 லட்சம் பேரும் தனியாக கோச்சிங் சென்டர் களுக்கு சென்றவர்கள் எனவும் திருச்சி சிவா சுட்டிக் காட்டினார்

இந்த கோச்சிங் சென்டர் களுக்கு ஒரு மாணவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள் அப்படி என்றால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இந்த கோச்சிங் சென்டர் கள் நீட் தேர்வை வைத்து சம்பாதிக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத ஏழை எளிய மாணவர்கள் இந்த நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரிழந்திருக்கிறார்கள்

எனவே, தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கக்கூடிய இரண்டு தீர்மானங்களை உடனடியாக குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz