திருச்சி-டெல்லிக்கு விமான சேவை தேவை - நாடாளுமன்றத்தில் திருநாவுக்கரசர் கோரிக்கை!

Friday 28, June 2019, 00:19:13

17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி துவங்கி நடந்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர் பேசுகையில்: தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் 3வது பெரிய விமான நிலையமாகும்.

இதற்கு 2012 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஓ. 9001-2008 தர சான்று வழங்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 5 சர்வதேச நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 7 நிறுவனங்கள் மட்டுமே விமான சேவை அளிக்கின்றன.

இங்கிருந்து நாட்டில் எந்தவொரு உள்நாட்டு விமான நிலையங்களுக்கும் ஏர் இந்தியா விமான சேவை இல்லை. எனவே ஏர் இந்தியா உள்நாட்டு விமானம் திருச்சியில் இருந்து டெல்லிக்கு சென்னை அல்லது ஹைதராபாத் அல்லது பெங்களுரு வழியாக இயக்க வேண்டும்.

திருச்சி பகுதியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளில் 18 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவ் விமான நிலையம் மேலும் பல வெளிநாட்டு நகரங்கள், உள் நாட்டு நகரங்களோடு இணைக்கப்பட வேண்டும். அதற்கேற்ப விமான நிலையம் விரிவாக்கம், ஓடுதளத்தை அதிகரிக்க வேண்டும்" என்று பேசினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz