திருச்சி: தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள்; ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு

Thursday 27, June 2019, 23:55:10

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், சிட்டிலரை, சேருகுடி, ஆராய்ச்சி, மகாதேவி, பிள்ளாப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 34 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் 27 வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சிட்டிலரை கிராமத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் முசிறி முதல் அழிஞ்சிப்பள்ளம் சிட்டிலரை வரை ரூபாய் 36.57 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சுக் குழி, ரூபாய் 17.74 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து சேருகுடி ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் சேருகுடி காலணி ரோடு பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 2.68 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், ரூபாய் 77 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் 8.70 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

cls

ஆராய்ச்சி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 6.60 இலட்சம் மதிப்பீட்டில் தாண்டவம்பட்டி வடக்கு வாரி சிமெண்ட் கான்கிரிட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும், ரூபாய் 20.00 இலட்சம் மதிப்பீட்டில் தாண்டவம்பட்டி வடக்கு வாரியில் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

ரூபாய் 8.33 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூபாய் 1.16 இலட்சம் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைத்தல், ரூபாய் 6.60 இலட்சம் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மேற்கு வாரியில் சிமெண்ட் கான்கிரிட் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 20.40 இலட்சம் மதிப்பீட்டில் சக்கம்பட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

மகாதேவி ஊராட்சியில் ரூபாய் 2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் புகழேந்தி ரெட்டியார் தோட்டம் முதல் பொதுப்பணித்துறை ஏரி வரை வாரியை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூபாய் 4.52 இலட்சம் மதிப்பீட்டில் வேலம்பட்டி கிராமத்தில் புதிய போர்வெல், மின் மோட்டார் மற்றும் பைப் லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிள்ளாப்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து முத்துராஜபாளையம் கிராமத்தில் ரூபாய் 3.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வேல், மின்மோட்டார் மற்றம் பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, தலா ரூபாய் 2.10 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய 2 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 ஆயிரம் மதிப்பில் அசோலா வளர்த்தல் பணி என மொத்தம் 27 பணிகள் ரூபாய் 234.79 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், உரிய காலத்திற்குள் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், மணிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியளர்கள் சுப்ரமணியம்(ஊரக வளர்ச்சிகள்), பாலசுந்தரம்(சாலைகள் மற்றும் பாலங்கள்), மாவட்ட ஊராட்சி அலுவலக செயலர் சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz