சேலம் மாவட்ட ஆட்சியராக சி.அ. ராமன், இ.ஆ.ப. பொறுப்பேற்கிறார்!

Friday 28, June 2019, 00:20:33

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.  வேலூர் மாவட்ட  ஆட்சியராகப் பணியாற்றி வந்த சி.அ. ராமன் , இ.ஆ.ப, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் மாண்புமிகு.முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நியமனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும், பின்னர் 31.07.2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்.

தற்போது இவர் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz