"ஹைட்ரோகார்பன் கிணறுகளை மனிதர்கள் வசிக்காத இடத்தில் அமையுங்கள்!" - மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு!

Monday 01, July 2019, 23:11:03

இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஹைட்ரோகார்பன் கிணறுகள் மீண்டும் தமிழகத்தில் தோண்டப்பட இருப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

திருச்சி சிவா இன்று மாநிலங்களவையில் , "தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் குறைந்துவிட்டது, காவிரியில் தன்ணீர் வரவில்லை. இதுபோன்ற காரணங்களால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

இப்படி ஒரு சூழலில்தான், மத்திய அரசு, தமிழகத்தில், ஹைட்ரோகார்பன் கிணறுகளை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் 1000 முதல் 2000 மீட்டர் ஆழம் தோண்டினால்தான் தண்ணீர் பெற முடிகிறது. தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கிறது. நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. பணக்கார தேசமாக நாம் இருக்க நாங்கள் விரும்பவில்லை, ஆரோக்கியமான தேசமாக இருக்க விரும்புகிறோம்.

புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம். தற்போதுள்ள கிணறுகளில் பணிகளை நிறுத்துங்கள்.

ஒருவேளை எண்ணை வளம் அதிகம் தேவை என்றால், இதுபோன்ற திட்டங்களை மனிதர்கள் வசிக்காத இடத்தில் செயல்படுத்துங்கள். எங்களுக்கு, எதிர்கால தலைமுறை குறித்து கவலை ஏற்படுகிறது" என்று பேசினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz