கரூர் அருகே 40 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மாலை கோவில் மாடு தாண்டும் திருவிழா!

Wednesday 03, July 2019, 15:52:02

கரூர் அருகே 40 வருடங்களுக்கு பிறகு மாலை கோவில் மாடு தாண்டும் திருவிழா நடைபெற்றது.இதில் 300 க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.

கரூர் அருகே உள்ள மூக்காணங்குறிச்சி கிராமத்திற்கு உடபட்ட கொக்கம்பட்டி கிராமம் உள்ளது.இங்கு ஸ்ரீ பாலகேத்து ஸ்ரீ பெத்தகேத்து ஆகிய தெய்வங்கள் உள்ளது.இக்கோவில் அனைத்து ஊர் குறிப்பிட்ட குடிபாட்டுகாரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் மாலை கோவில் மாடு தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதனையடுத்து 40 வருடங்களுக்கு பிறகு இன்று எருதுகள் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திண்டுக்கல்,நாமக்கல்,கரூர்,திருச்சி, மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன.

இதில் முதலிடத்தை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த காட்டு நாயக்கனூர் மந்தையும், இரண்டாமிடத்தை கரூர் கோடங்கிபட்டி ராஜ் மந்தையும் மூன்றாம் இடத்தை சேந்தமங்கலம் அய்யாசாமி மந்தையும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற எருதுகளுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டிகெளரவிக்கபட்டது.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz