உடல்நலகுறைவு கரணமாக இரண்டு மாதம் மருத்துவ விடு்ப்பில் ஓய்வில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மீனாவுக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காக தர்மபுரி மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து இலஞ்சத் தொகை கேட்கப்பட்டது.
ஆசிரியை மீனா தன்னுடைய சம்பள நிலுவையினை வழங்குவதற்காக தர்மபுரி மாவட்ட வட்டார கல்வி அலுவலர் மேரிகாய ராணி மற்றும் அவரது உதவியாளர் குமரேசன் ஆகியோர் லஞ்சமாக ரூபாய் 5000 கேட்பதாக தருமபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் ஆசிரியை மீனாவிடம் ரசாயணம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அதனை தர்மபுரி மாவட்ட வட்டார கல்வி அலுவலரிடம் தரும்படி அனுப்பி வைத்து அங்கு நடப்பதை ஒளிந்திருந்து கண்காணித்தனர்.
ஆசிரியை மீனாவிடம் இருந்து வட்டார கலவி அலுவலர் மேரி சகாயராணி 3 ஆயிரம் ரூபாய் பணமும் அவரது உதவியாளர் குமரேசன் 2 ஆயிரம் ரூபாய் இலஞ்சப் பணம் பெறும் பொழுது மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாக பிடித்துக் கைது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணி இன்னும் மூன்று மாதத்தில் பணி ஓய்வு பெறவிருந்தது குறிப்பிடத் தக்கது.
தர்மபுரி மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.