புதுக்கோட்டை: அதிமுக பிரமுகர் பழக்கடை சேகருக்கு சொந்தமான பழக்கடை குடோன் எரிப்பு.

Tuesday 06, August 2019, 14:34:34

புதுக்கோட்டை நகர அதிமுக பிரமுகர் பழக்கடை சேகருக்கு சொந்தமான பழக்கடை குடோன் தெற்கு 4-ஆம் வீதி மற்றும் தெற்கு3ஆம் வீதி ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது.

இந்த குடோன் நேற்று இரவு மர்ம ஆசாமிகளால் தீ வைக்கப்பட்டு..முழுவதும் எரிந்துள்ளது

இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் சாமான்கள் மற்றும் பிரீசர் தட்டு வண்டிகள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து உள்ளன. முன் விரோதம் காரணமாக இந்த தீ விபத்து நடந்ததா அல்லது மின்கசிவினால் தீப்பிடித்ததா ஆகிய இரு கோணங்களில்  போலீஸ் இது குறித்து விசாரித்து வருகிறது 

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பழங்கள் இந்த விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz