தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரியில் போராட்டம்.

Tuesday 06, August 2019, 15:20:20

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்க கூடாது. NEXT தேர்வை திணிக்கக் கூடாது. இணைப்புப் படிப்புகளை(bridge courses) புகுத்தக் கூடாது. வரைவு தேசிய கல்விக் கொள்கை- 2019ஐ திரும்பப் பெற வேண்டும். நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதோர், மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்கக் கூடாது.

மருத்துவக் கல்வியை கார்ப்பரேட், வணிகமயமாக்கக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz