முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மறைவு.

Tuesday 06, August 2019, 15:46:57

முன்னாள் அமைச்சர் எஸ். ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று மதுரையில் காலமானார்.

ஜெனிபர் சந்திரன்  1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்,திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, தி.மு.க வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகவும்  பணியாற்றினார்.

தி.மு.க., மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, அ.தி.மு.க., ஆட்சியின் போது 2004ம் ஆண்டில் ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார்.  

அவருக்கு அ.தி.மு.க., மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவியினை ஜெயலலிதா வழங்கினார்.

அதன் பின்னர்  தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் பதவியையும்  ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கி அழகு பார்த்த ஜெயலலிதா, 2010ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரனை நீக்கினார்.

மறைந்த முன்னாள் அமைச்சருக்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல்களைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz