மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

Sunday 11, August 2019, 17:06:42

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் இன்று பூங்கொத்து வழங்கி சந்தித்துப் பேசினார்.

கவர்னர் மாளிகையில் வைத்து நடந்த இந்த திடீர் சந்திப்பு வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசு வட்டாரங்களில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் வெங்கையா நாயுடுவின் இரண்டு ஆண்டு காலப் பணியை ஆவணப்படுத்தும் Listening, Learning and Leading என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், ஆளுநர் பன்வாரி லால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz