நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் வரும் 14-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Sunday 11, August 2019, 17:21:34

வானிலை முன்னரிவிப்புகளாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாலர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

* ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று வலுவான நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மோதி வீசக் கூடிய நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் அடுத்த 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்.

* மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.

* உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மேற்குப் பருவமழை காலத்தில் சென்னையில் மழை குறைவாகத்தான் இருக்கும் என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் .

ஆக.14 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு : நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் வரும் 14-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 12-ஆம் தேதி முதல் வரும் 14-ஆம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz