மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின விழா

Friday 23, August 2019, 16:46:29

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், TLK காம்ப்ளஸ், SW Winner Banquet ஹாலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ( இந்திய குடியுரிமை) மன்றம் சார்பாக 73வது இந்திய சுதந்திர தின விழா ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நடந்தது.

விழா காலை 8.30 மணி அளவில் இந்திய தேசியக் கொடியேற்றம் மற்றும் இந்திய தேசிய கீத பாடலுடன் தொடங்கியது. இவ் விழாவில் மலேசிய இந்தியர்களின் முன்னோடி டான் ஶ்ரீ டாக்டர். தேவகி கிருக்ஷ்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சுதந்திரதின விழாவில் குழந்தைகளுக்கான இசை, நடனம், வினாடி வினா, நீயா நானா குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, குழந்தைகளை திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.ஆண்கள் பங்குகொண்ட கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான இறகு பந்து போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சுதந்திர தின கோப்பை விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. பெரியவர்கள், குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை ஊஅமைந்திருந்தது. இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சுதந்திரதின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழா குறித்து விழாவில் கலந்துகொண்ட அனைவரும் விழாக்குழுவிற்கு தங்களின் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.


வெளிநாடு வாழ் தமிழர்கள் மன்றம் சார்பில் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துவருகின்றனர், தற்போதய இவ்விழா மலேசியாவில் இரண்டாவது சுதந்திரதின விழா கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் 600 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்திய தமிழ்க் குடும்பங்களை ஒருங்கிணைத்து உணவு உள்ளிட்ட அனைத்து விழா ஏற்பாடுகளையும் டாக்டர்.சத்திவேல், டாக்டர். பாலாஜி, திரு.பாலாஜி நாராயணன், திருமதி. கோமதி, திருமதி. பூர்ணிமா, திருமதி. சவிதா, திரு. விஜய் ஆனந் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக
செய்திருந்தனர்.

 
© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz