பாபர்மசூதி இடிப்பு வழக்கு-முன்னாள் கவர்னர் கல்யாண்சிங்குக்கு சிபிஐ சம்மன்

Tuesday 10, September 2019, 17:17:26

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் ராஜஸ்தான் மாநில கவர்னரும் ஆன கல்யாண்சிங்குக்கு மாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அப்போது மாநிலத்தின் முதல்வராக கல்யாண்சிங் இருந்தார். இது தொடர்பான வழக்கில்,  கல்யாண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களான, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக, அவர்மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட்டு வந்தது. மாநிலத்தின் முதன் குடிமகனாக அவர் இருந்ததால், அவரை, நீதிமன்றமோ,  எந்த ஒரு விசாரணை அமைப்போ, விசாரணைக்கு அழைக்க முடியாத அளவில்  சட்ட பாதுகாப்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையில், கல்யாண் சிங்கின்  பதவிக்காலம், சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அவர் உடடினயாக உ.பி. முதல்வர் யோகியை சந்தித்து மீண்டும் பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு  தொடர்பான வழக்கில் கல்யாண்சிங்குக்கு சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுளளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz