நெல்லை: 'காப்பான்' பட வெளியீட்டின்போது  பேனருக்குப் பதில் பொதுமக்களுக்கு 200 ஹெல்மெட்டுக்களை வழங்க சூர்யா இரசிகர்கள் முடிவு. 

Monday 16, September 2019, 19:19:42

பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ இறந்த சம்பவத்திற்கு பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் 'காப்பான்' திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, 'காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பள்ளிகளில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தார்

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் என்பவர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். 'காப்பான்' திரைப்படத்தின் போது பேனர் வைக்கும் செலவில்அதனைத் தவிர்த்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்யலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார்

நெல்லை காவல்துறை துணை ஆணையரின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சூர்யாவின் ரசிகர்கள் 'காப்பான்' திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 20ஆம் தேதி பேனர் கட்ட செய்யப்படும் பணத்தில் 200 ஹெல்மெட்டுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.இதனையடுத்து  சூர்யாவின் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz