வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

Monday 23, September 2019, 18:58:08

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடும் இந்த காலகட்டத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயல் போன்ற போன்றவற்றால் கனமழை பெய்யக்கூடும். இதனால் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக உயிர்சேதங்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும், பேரிடர் மேலாண்மை குழுவின் நடவடிக்கைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆலோசனைகளை வழங்கினார்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz