"கலைஞர் செய்திகள்" முன்னாள் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் டாயல் மறைவு - சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

Wednesday 20, November 2019, 18:28:19

மூத்த பத்திரிகையாளர் - கலைஞர் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியர் திரு. டாயல் அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று டாயல் இயற்கை எய்தினார்.

அவரது மறைவு குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் விடுத்துள்ள இரங்கற் செய்தி.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய டாயல் அவர்கள்,தினத்தூது, தினசரி, மாலை முரசு, மணிச்சுடர் என பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு 2007ஆம் ஆண்டு ’கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக இணைந்து 2017 வரை பணியாற்றி உள்ளார்.

திருடாயல் அவர்களின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz