ஆரப்பள்ளம் ஊராட்சி தலைவர் பதவியேற்பு கோலாகலம்

Saturday 11, January 2020, 00:26:51

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அரிமா சங்க முன்னாள் ஆளுநர் டாக்டர் டி.பூசை தலைமையில் நடைபெற்ற விழாவில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் கலந்து கொண்டு தலைவர் வனிதா முருகானந்தம் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ammu
இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் மேலாளர் சொக்கலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெயபால், மகாலிங்கம், சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆனந்தநடராஜன், சீனிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி, 21 கிராம கூட்டமைப்பு தலைவர் ஆரப்பள்ளம் சேகர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நடராஜன் உள்ளிட்டவர்கள் புதியவர்களை வாழ்த்தி பேசினார்கள். உறுப்பினர்கள் சார்பில் ரெத்தின வேலு மற்றும் ஊராட்சி தலைவர் வனிதா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார்கள். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இறுதியில் நல்லூர் பகுதி முக்கியஸ்தர் கரு.முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz