திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு

Sunday 01, March 2020, 20:14:15

திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தமுறை திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் ஆபத்தான நிலையில் இருப்பதால் கழகத்தினர் யாரும் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், சென்னைக்கும் வரவேண்டாம் என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொடியேற்றத்துடன் தமிழகமெங்கும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கழக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சியின் கழக கொடி ஏற்றப்பட்டது.

இதுவரை திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த கே.என்.நேருதான் எப்போதுமே கொடியேற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அவர் முதன்மை செயலாளராக பதவி உயர்ந்தாலும் திருச்சி திமுக என்றால் கே.என்.நேரு தான் என்பதாய் அவரது முழு கவனமும் சிதறாமல் திருச்சி பக்கமே இருக்கின்றது.

இந்தநிலையில் இன்றைய கொடியேற்று விழாவிலும், மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்விலும் தான் வழி விட்டு மாவட்ட செயலாளர்கள் மூவரையும் மாலையிட வைத்தும், கொடியேற்ற வைத்தும் அழகு பார்த்தார். மாலையிட சற்று தயங்கியே நிக்க, எப்பா போய் ஏத்துங்கப்பா என்றபோதும் மாநகர செயலாளர் மு.அன்பழகன் தடுமாற்றத்தோடுதான் நின்றபோது எப்பா கட்சி காரங்க எல்லாம் இப்படி வாங்கப்பா என தனது இரு பக்கமும் அழைத்துக்கொண்டு தொண்டர்களோடு தொண்டர்களாக சிலைக்கு கீழே நின்றுக்கொண்டதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலெட்.
stalin birthday1
பின்னர் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் கூட்டாக சென்று கழகக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.
பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
stவழக்கமாக மாலை அணிவிக்கும் கே.என்.நேரு இந்தமுறை மாவட்ட செயலாளர்களை மாலை அணிவிக்க சொல்லி அழகு பார்த்தார். சிலைகளுக்கு கீழே நின்று கட்சியினரை அருகில் அழைத்து நிழற்படங்களை எடுத்துக்கொண்டதோடு கோஷங்கள் எழுப்பப்பட்டது. அங்கு இருந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணிப்போருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்துச்செல்வம், விஜயராஜ், செயற்குழு உறுப்பினர்கள் செவந்திலிங்கம், முருகேசன், பழனியாண்டி, டோல்கேட் சுப்ரமணி, அந்தநல்லூர் துரைராஜ் மற்றும் பகுதி செயலாளர்கள் கண்ணன் காஜாமலை விஜய் மதிவாணன் ராம்குமார் மண்டி சேகர் மோகன்தாஸ், இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள், கதிர்வேல், கருப்பையா, செல்வராஜ், மாரியப்பன், ரவிச்சந்திரன், சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz