திருச்சியில் சுயமாக கை சுத்திகரிப்பான்‌ தயாரிப்பு

Tuesday 24, March 2020, 01:06:45

உலக சுகாதார அமைப்பு (WHO), கோவிட்-19 நோயிலிருந்து நம்மை‌ பாதுகாக்க ஆல்கஹாலால் ஆன கை‌ சுத்திகரிப்பான்‌ அதாவது ஹான்ட் சானிடைஸரை பரிந்துரைக்கிறது. WHO மற்றும்‌ NIT திருச்சிராப்பள்ளியின்‌ மருத்துவர்கள், கைகளை தண்ணீர் மற்றும் சோப்பினால் கழுவுவதும்‌ அதே‌ பலனைத் தரும் என்கிறார்கள். ஆனால்‌ பயன்படுத்த ‌வசதியாகவும் கைவசம் எடுத்துச்செல்ல வசதியாகவும் ‌இருப்பதால் மக்கள் கை சுத்திகரிப்பானையே விரும்புகிறார்கள்.

அதிகரிக்கும் தேவை கருதி, Dr.R.ப்ரியன்கா, NIT திருச்சிராப்பள்ளியின் மருத்துவ அதிகாரியின் முயற்சியால், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி, வேதிப் பொறியியல் பேராசிரியர் Dr.சின்டெரல்லா, நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை அமைப்பின் தலைவர் மற்றும் வேதிப் பொறியியல் பேராசிரியர் Dr.N.அனந்தராமன், மற்றும் வேதிப் பொறியியல் துறைத் தலைவரான Dr.மீரா பேகம்‌ ஆகியோரின் ஆலோசனையுடன்‌ இருபத்தி ஐந்து லிட்டர் கை சுத்திகரிப்பான், நிறுவன வளாகத்தில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டது.

குழுவின் உறுப்பினர்கள் Dr.R.ப்ரியங்கா, Dr.மலைமாலா ஸரஸ்வேணி, நிறுவனத்தின் மருத்துவ அதிகாரிகள், திரு.நாராயணன் நிர்வாக பொறியாளர், திரு.கார்த்திகேயன் AR கணக்கியல், திரு.கண்ணன், திரு.ராபின்ஸன் வேதியியல் பொறியாளர் மற்றும் மோகன் வேதியல் துறை, ஆகியோர் இனைந்து இந்த முயற்ச்சியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். இது கோவிட்-19 தொற்றிலிருந்து தம்மையும் மற்றவரையும் காத்து, கை கழுவும் வசதி இல்லாத இடங்களிலும் சூழ்நிலைகளிலும் கைகளின் சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக இருக்கும் ஒரு பெரும் முயற்சி.

இந்த முயற்சியை மிகவும்‌ மெச்சிய NIT திருச்சிராப்பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் Dr.மினி சாஜி தாமஸ் அவர்கள், தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பானின்‌ முதல் பாட்டிலை பெற்றுக்கொண்டார். பதிவாளர்‌ திரு.பழனிவேல் அவர்கள், கை சுத்திகரிப்பானை துறைகளில் மற்றும்‌ பொதுமக்கள் பயன்படுத்த பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தார். முயற்சியின்‌ வெற்றியையும் அதிகரிக்கும் தேவையையும் கருதி‌ சில நாட்களில் கூடுதலாக‌ ஒரு நூறு ‌லிட்டர்‌ கை சுத்திகரிப்பானை தயாரிக்கத்‌‌ திட்டமிட்டுள்ளது NIT திருச்சிராப்பள்ளி குழு.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz