குடிமராமத்துப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்!

Saturday 23, May 2020, 01:01:48

தமிழகத்தில் மேட்டூர் அணை ஜூன்-23-ம் தேதி திறந்து விட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால் காவிரி நீர் பாயும் டெல்டா மாவட்டங்களில் ஆறுகளை தூர்வாரவும், வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்திருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை கண்காணிக்கவும், தூர்வாரும் பணிகளை விரைவுப்படுத்தவும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு;
தஞ்சை - ககன்தீப் சிங் பேடி
திருவாரூர் - ராஜேஷ் லக்கானி
நாகை - சந்திரமோகன்
கரூர் - கோபால்
திருச்சி - கார்த்திக்
அரியலூர் - விஜயராஜ்குமார்
புதுக்கோட்டை - அபூர்வா
மேற்கண்டவாறு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz